< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|29 July 2023 1:00 AM IST
பழனி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புது ஆயக்குடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த பாலியல் வன்முறையை கண்டித்தும், அங்கு கலவரத்தை தடுக்க தவறியதாக மணிப்பூர் மாநில மற்றும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டக்குழு உறுப்பினர் அரவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.