< Back
மாநில செய்திகள்
திருப்பூர்
மாநில செய்திகள்
சமுதாய நலக்கூடம் அமைக்க கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை
|19 Jun 2023 3:21 PM IST
சமுதாய நலக்கூடம் அமைக்க கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவினாசி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செங்காடு கிளை சார்பில்அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியதாவது:
அவினாசி பேரூராட்சி 9-வது வார்டு முத்து செட்டிபாளையம் பகுதியில் சமுதாயம் நலக்கூடம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கி 6 வருடங்களுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே உடனடியாக சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். இந்திரா நகர் பகுதியில் பழுதடைந்து உள்ள சாக்கடையை புதிய சாக்கடையாக அமைக்க வேண்டும். கால்நடை மருத்துவமனையில் இருந்து சேவூர் ரோடு வரை முத்து செட்டிபாளையம் ரோட்டில் உள்ள வேகத்தடைக்கு வெள்ளை நிறம் அடிக்க அல்லது முகப்பு விளக்கு பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனு கொடுத்தனர்.
------------------