< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பாதயாத்திரை
|12 May 2023 12:43 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.
சாத்தூர்,
சாத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக மத்திய அரசை அகற்றி தேசத்தை பாதுகாக்க வலியுறுத்தி பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாத்தூர் சுற்று வட்டார பகுதி முத்துச்சாமிபுரம், கோஸ்குண்டு, முத்தார்பட்டி, லட்சுமியாபுரம், பாப்பாக்குடி வரை நடைபெற்ற பாதயாத்திரையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட பொருளாளர் பழனிகுமார் தொடங்கி வைத்தார். இதில் தாலுகா செயலாளர் சுவாமிநாதன், நகர செயலாளர் ஜான்ராஜா, மாதர் சங்க தலைவர் மீனாட்சி மற்றும் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.