< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'தேர்தல் பத்திரம் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1 ரூபாய் கூட நிதி பெறவில்லை' - முத்தரசன்
|18 Feb 2024 6:27 PM IST
தேர்தல் பத்திரம் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிதி பெற்றதாக கூறப்படும் தகவல் தவறானது என முத்தரசன் தெரிவித்தார்.
சென்னை,
தேர்தல் பத்திரங்கள் மூலமாக இதுவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த விதமான நீதியும் பெறவில்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"தேர்தல் பத்திரம் மூலம் நாங்கள் 1 ரூபாய் கூட நிதி பெறவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கிக் கணக்கு இருப்பில்தான் 13 கோடி ரூபாய் உள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிதி பெற்றதாக கூறப்படும் தகவல் தவறானது.
அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்பதை நான் சொல்லவில்லை, அதுவே பொதுவான கருத்தாக உள்ளது. அவர்களால் ஒரு அணியைக் கூட உருவாக்க முடியவில்லை. எங்கள் அணி பலமாக உள்ளது. நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.