< Back
மாநில செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா
விருதுநகர்
மாநில செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா

தினத்தந்தி
|
17 Oct 2023 1:33 AM IST

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்திராயிருப்பு தாலுகாவிற்கு தலைமை ஆஸ்பத்திரியாக வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியின் மூலம் தினமும் எண்ணற்ற கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தநிலையில் இந்த ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் இல்லை, நோயாளிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது.இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்திற்கு தேசிய குழு உறுப்பினர் ராமசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழகிரிசாமி, லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன், தாலுகா செயலாளர் கோவிந்தன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சவுந்தர பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்