< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
|28 July 2022 10:40 PM IST
மின்கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காட்பாடி காந்திநகரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காட்பாடி தாலுகா செயலாளர் சுடரொளியன், வேலூர் வடக்கு தாலுகா செயலாளர் பாண்டுரங்கன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் தயாநிதி, மாநிலக்குழு உறுப்பினர் பாக்கியம் உட்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கை குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் அரிசி, கோதுமை, பால், தயிர், மோர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும், மாநில அரசின் மின்கட்டண உயர்வை கைவிடக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகில் இருந்து ஊர்வலம் சென்றனர்.