< Back
மாநில செய்திகள்
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
19 Oct 2023 12:23 AM IST

அம்பையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அம்பை:

நெல்லை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளுக்காக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போது சி.ஐ.டி.யு. தலைவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து அம்பை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன் கண்டன உரையாற்றினார். தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெகதீசன், ராஜகோபால், சுடலைமணி உள்பட 40-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்