< Back
மாநில செய்திகள்
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
14 July 2023 12:15 AM IST

சிவகிரியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகிரி:

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பாக, கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கம், அகில இந்திய பெண்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை சார்பில் சிவகிரி பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். நகர தலைவர் பழனி முன்னிலை வகித்தார். 100 நாள் வேலை திட்டத்தை சிவகிரி பேரூராட்சி பகுதிக்கும் விரிவுப்படுத்த வேண்டும். சிவகிரி பேரூராட்சி பகுதி மக்களுக்கு நிரந்தரமாக சுத்தமான குடிநீர் முறையாக வினியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அய்யப்பன், அகில இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட தலைவர் ஆயூப்கான், அகில இந்திய பெண்கள் முன்னேற்ற கழக தலைவர் பிச்சைமணி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகிரி பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கடகோபுவிடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்