< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
துரைப்பாக்கத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
|8 Dec 2022 4:44 PM IST
குடியிருப்பவர்களுக்கு இழப்பீடு மற்றும் மாற்று குடியிருப்பு வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் அறிஞர் அண்ணா நகர் 7-வது தெரு மற்றும் 8-வது தெருக்களில் உள்ள 16 வீடுகளை சாலை விரிவாக்க பணிக்காக நாளைக்குள்(9-ந் தேதி) அகற்ற நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. எனவே அந்த 16 வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு இழப்பீடு மற்றும் மாற்று குடியிருப்பு வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி அரசியல் மாநில குழு உறுப்பினர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமை தாங்கினார். இதில் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர்கள் வேல்முருகன், சிவா உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.