< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
27 May 2022 5:58 PM GMT

நாகர்கோவிலில் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்- டீசல், கியாஸ் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரிகளை முழுமையாக கைவிட வேண்டும், விலை உயர்வை மொத்தமாக திரும்ப பெறவேண்டும், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும், வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும், வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சிகளுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தலைமை தாங்கினார். மோகன், அனில்குமார், பகலவன், அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷங்கள்

முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கி முத்து, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் அந்தோணி, அகமது உசேன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஸ்ரீகுமார், இசக்கிமுத்து, லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் சுசீலா, சூசைமரியான், அய்யப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சிறுத்தை தாஸ், பேரறிவாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்