< Back
மாநில செய்திகள்
கம்யூனிஸ்டு பொதுக்கூட்டம்
விருதுநகர்
மாநில செய்திகள்

கம்யூனிஸ்டு பொதுக்கூட்டம்

தினத்தந்தி
|
30 May 2023 12:47 AM IST

கம்யூனிஸ்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆலங்குளம்,

ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோட்டில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய தொழிற் சங்க மையம் சார்பாக மே தின நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஒன்றியக்குழு உறுப்பினர் பெரிய சக்கரை தலைமையில் நடைபெற்றது. சி.ஐ.டி.யு.சங்க நிர்வாகி சேர்வை முன்னிலை வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கி அருகிலிருந்து சி.ஐ.டி.யூ.சங்க தொழிலாளர்கள் ஊர்வலமாக புறப்பட்டு முக்கு ரோடு வந்து சேர்ந்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் அர்ஜுன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குருசாமி, சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர் முனியசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் முத்து நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்