< Back
மாநில செய்திகள்
நத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகள் கிடந்ததால் பரபரப்பு... இருவர் கைது
மாநில செய்திகள்

நத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகள் கிடந்ததால் பரபரப்பு... இருவர் கைது

தினத்தந்தி
|
26 Aug 2024 9:53 PM IST

நத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகள் கொட்டிக் கிடந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகள் கொட்டிக் கிடந்த விவகாரத்தில், இருவரை போலீசார் கைது செய்தனர்.

செந்துறை சாலையில் உள்ள கலைநகர் குடியிருப்பு பகுதியில், முட்புதருக்குள் சணலால் சுற்றப்பட்ட சுமார் 30 நாட்டு வெடிகள் சிதறி கிடந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் சிதறிக் கிடந்த நாட்டு வெடிகளை அங்கிருந்து பாதுகாப்புடன் அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர்.

வெடிகளை ஆய்வு செய்ததில், அவை பண்டிகை காலங்களில் பயன்படுத்தப்படும் வெடி வகையை சார்ந்தவை என போலீசார் கண்டறிந்தனர். இது தொடர்பாக கலைநகரைச் சேர்ந்த மதிவாணன், மதன்குமார் ஆகிய சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்