< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

தினத்தந்தி
|
30 May 2023 4:21 PM IST

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூரை அடுத்த அல்லிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் அல்லிமுத்து. கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு கொடுத்த 2½ செண்ட் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இந்த நிலையில் இந்த இடத்தில் வீட்டுக்கு வரும் வழியை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து சுற்றிலும் கம்பி வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அல்லிமுத்து தனது குடும்பத்தினருடன் வெளியில் செல்வதற்கு, அவருடைய குழந்தைகள் விளையாடுவதற்கு, பள்ளிக்கு செல்லவும், வாகனங்கள் வருவதற்கும் வழியில்லாமல் அவதிப்படுவதாக கடந்த 22-ந் தேதி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்

இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று காலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்தாருடன் அல்லிமுத்து வந்தார்.

அங்கு அல்லிமுத்து மகன் கோபி திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணைய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுதாரித்துக் கொண்டு அவரிடம் இருந்த மண்எண்ணைய் கேனை பறித்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்