< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வடமாநில தொழிலாளர்கள் குறித்து பரவும் வதந்திகளை கண்காணிக்க குழு அமைப்பு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு
|8 March 2023 9:55 PM IST
5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோ பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லத் துவங்கினர்.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாட்டிற்கு நேரில் வந்து ஆய்வு செய்த பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர், போலி வீடியோ விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்ததாகவும், இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பயம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து பரவும் வதந்திகளை கண்காணிக்க 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.