< Back
மாநில செய்திகள்
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சங்கர் தேசிய கொடியை ஏற்றினார்
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சங்கர் தேசிய கொடியை ஏற்றினார்

தினத்தந்தி
|
16 Aug 2023 12:52 PM IST

ஆவடி,

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று 77-வது சுதந்திர தின விழாவையொட்டி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆயுதப்படை காவல் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து போலீசாரின் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பல்வேறு சமுதாய நலப்பணிகளை மேற்கொண்ட 16 சமூக ஆர்வலர்களை பாராட்டி போலீஸ் கமிஷனர் சங்கர் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். அதேபோல் சிறப்பாக பணிபுரிந்த 54 காவல் உதவி ஆணையர்கள் முதல் போலீஸ்காரர்கள் வரை பாராட்டு சான்றிதழ் வெகுமதி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் போலீஸ் இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர் பாஸ்கரன், பாலகிருஷ்ணன், பெருமாள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்