சென்னையில் சிறப்பாக பணியாற்றிய 35 போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு
|சென்னை போலீசில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை தேர்வு செய்து அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்து நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்து வருகிறார்.
சென்னை,
சென்னை போலீசில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை தேர்வு செய்து அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்து நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்து வருகிறார். அந்த வகையில் இந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 35 போலீசாரை தேர்வு செய்து அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் பாராட்டு தெரிவித்தார். விரல்ரேகை பிரிவு கூடுதல் சூப்பிரண்டு கலைகண்ணகி, காவல்கரங்கள் இன்ஸ்பெக்டர் மேரிராஜு, முக்கிய குற்றங்கள் பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 22 போலீஸ்காரர்கள் பாராட்டு சான்றிதழ் பெற்றோர் பட்டியலில் உள்ளனர்.
யானைகவுனி பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 கோடி பணத்தை ஆட்டோவில் கொண்டு வந்தவர்களை பணத்துடன் போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சுந்தர்ராஜையும் நேரில் அழைத்து கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் சுதாகர், கபில்குமார் சி சரத்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.