< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வடிகால் அமைக்கும் பணியை ஆணையர் ஆய்வு
|18 July 2022 12:13 AM IST
வடிகால் அமைக்கும் பணியை ஆணையர் ஆய்வு நடந்தது.
அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் மூலம் அசோக் நகரில் வடிகால் அமைக்கும் பணி மற்றும் பேவர் பிளாக் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேற்கண்ட பணிகளை சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். பின்னர் அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வளம் மீட்பு பூங்காவில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், உரக்கிடங்குகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன், துணைத்தலைவர் தங்கராஜ், திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் மேனகா மற்றும் பலர் உடனிருந்தனர்.