< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஆணையர் ஆய்வு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஆணையர் ஆய்வு

தினத்தந்தி
|
20 Oct 2023 4:15 AM IST

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் நேற்று காந்தி காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்த, சில்லரை கடைகள் என 250-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று காந்தி காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மார்க்கெட்டில் குடிநீர், மின்விளக்கு, இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் மார்க்கெட்டில் சேரும் குப்பைகளை தினமும் அகற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதிஅளித்தார். இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் வில்லியம் சகாயராஜ், நகர்நல அலுவலர் செபாஸ்டியன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்