< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
நாகர்கோவிலில்வணிகவரி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
|31 May 2023 2:54 AM IST
நாகர்கோவிலில்வணிகவரி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள வணிகவரி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வு பட்டியல்களை உடனடியாக வெளியிட வேண்டும். கோட்ட மாறுதல் கோரியவர்களுக்கு உடனடியாக பணியிட மாறுதல் வழங்க வேண்டும். அறிவியல் பூர்வமற்ற வருவாய் இலக்குகள் மற்றும் வேலை இலக்குகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு வின்சென்ட் லூயி தலைமை தாங்கினார். செயலாளர் அய்யப்பன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து பணியாளர்கள் பணியாற்றினார்கள்.