< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு...!
|1 Jan 2024 7:19 AM IST
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் ரூ. 1,929-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சென்னை,
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் 1,929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டர் விலை 4.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1,924.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 22ம் தேதி 39 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 4.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1,924.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ கியாஸ் சிலிண்டர் விலை 918.50 ரூபாயில் நீடிக்கிறது.