< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வணிக சிலிண்டர் விலை ரூ.39 குறைந்தது...!
|22 Dec 2023 7:03 AM IST
கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும்.
சென்னை,
சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படும்.
அந்தவகையில் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.39 குறைந்து ரூ.1,929.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து வர்த்தக கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1,968.50 ல் இருந்து ரூ.1,929.50 ஆக குறைந்திருக்கிறது. இந்த விலை குறைவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதேவேளை வீடுகளில் பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.