ராமநாதபுரம்
தென்னை தொழில்கள் சார்ந்த வணிக வளாகம்
|ராமநாதபுரத்தில் தென்னை தொழில்கள் சார்ந்த வணிக வளாகம் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்த முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினை ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், ராமநாதபுரத்தில் தென்னை தொழில்கள் சார்ந்த வணிக வளாகம் அமைத்து கொடுக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும், கருணாநிதி காலத்தில் நிறுவப்பட்ட தென்னை வாரியத்தை செயல்படுத்தி சேர்மன் நியமிக்க வேண்டும். நிலத்தடி நீர்வளம் காக்க நீர் நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
அப்போது மாவட்ட தலைவர் அப்துல் முனாப், மாநில செயலாளர் செல்லதுரை, மாவட்டச்செயலாளர் மணிமாதவன், பொருளாளர் மோகன், கவுரவ ஆலோசகர் செல்லதுரை அப்துல்லா, தாமரைக்குளம் தனுஷ்கோடி, துணை தலைவர் கதிரேசன், துணைச்செயலாளர் தங்கசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால், உச்சிப்புளி நூருல்லா, சிவகங்கை மாவட்ட தலைவர் சேவுகபெருமாள் மற்றும் துரைபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.