< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள பாசன குளங்களில் நீர்வாழ் பறவையினங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
|28 Jan 2023 4:10 PM IST
தன்னார்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்று 60 குளங்களில் கணக்கெடுப்பு நடத்த உள்ளனர்.
நெல்லை,
நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடியில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள பாசன குளங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும் நீர்வாழ் பறவையினங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
இன்று முதல் 2 நாட்கள் நடைபெறும் இந்த 13-வது கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்று 60 குளங்களில் கணக்கெடுப்பு நடத்த உள்ளனர்.
தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டிய பெரும்பாலான குளங்கள் வறண்டு காணப்படும் நிலையில், அங்கு பறவைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள போதிலும், அங்கும் கணக்கெடுப்பு பணி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.