< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கோவை குணா காலமானார்..!
|21 March 2023 6:46 PM IST
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை,
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா. இவர் தனது தனித்துவ உடல்மொழியால் ரசிகர்களை ஈர்த்தவர்.
மேலும், கவுண்டமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலை அப்படியே மிமிக்ரி செய்யும் திறமை கொண்டிருந்தார்.
இவர், உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.