< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்

சென்னையில் மலர் கண்காட்சிக்கு வந்து குவிந்த வண்ணப்பூக்கள்

தினத்தந்தி
|
1 Jun 2022 3:55 PM IST

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது.

சென்னை:

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது.

மேலும் கருணாநிதி பிறந்தநாளில் சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. கலைவாணர் அரங்கில் ஜூன் 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல், மைசூரு போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்கள் சென்னை கலைவாணர் அரங்கிற்க்கு வந்து சேர்ந்தது. சுமார் 200-க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் மலர்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற இருக்கிறது.

தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்