< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
|4 Oct 2023 11:17 PM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதலில் தொழிலாளி பலியானார்.
கீரனூர் அருகே பாலண்டாம்பட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 60). தொழிலாளி. இவர் நேற்று தனது மொபட்டில் புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். குளத்தூர் அருகே வந்த போது, உப்பிலியக்குடியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் ஸ்ரீகாந்த் (18), வீரமுத்து மகன் செல்வராஜ் (20) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும், சொக்கலிங்கம் வந்த ேமாட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சொக்கலிங்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.