< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

தினத்தந்தி
|
28 Aug 2023 1:15 AM IST

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

நத்தம் அருகே உள்ள கொசவப்பட்டியை சேர்ந்தவர் தயாளன் (வயது 29). இவர், நத்தத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர், கொசவப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் நத்தத்திற்கு வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல்-நத்தம் சாலையில் சேர்வீடு விலக்கு பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது திண்டுக்கல்லில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு எழுதிவிட்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த போலீஸ்காரரான சுப்புராயன் (35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற தயாளன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தயாளன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுப்புராயன் காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்