புதுக்கோட்டை
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி
|மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலியானார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் விராலிமலை அருகே கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இரவு மீண்டும் வீட்டிற்கு வேலூரிலிருந்து குறிஞ்சிப்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெயமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி நல்லம்மாள் (50), அவரது மகன் அருள்ஜோதி (20) ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மணிகண்டன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நல்லம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.