< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு

தினத்தந்தி
|
24 Oct 2023 11:52 PM IST

ஆவூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

விராலிமலை ஒன்றியம், பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 54). விவசாயி. கருப்பையாவும், அதே ஊரை சேர்ந்த விவசாயி செல்வம் என்பவரும் நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்குவதற்காக மலம்பட்டிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஆவூர் அருகே இலுப்பூர் மாத்தூர் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே விராலிமலை தாலுகா வேலப்படையான்பட்டி கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (28) என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், கருப்பையா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

விவசாயி பலி

இதில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த செல்வத்தை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்