< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 வயது குழந்தை சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 வயது குழந்தை சாவு

தினத்தந்தி
|
12 July 2023 12:15 AM IST

திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 38). இவர் தனது மனைவி ஜோதி (32) மற்றும் குழந்தைகள் பத்ரேஷ் (5), சர்வேஷ் (3) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மணலூர்பேட்டையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சொரையப்பட்டு கிராமம் அருகே சென்றபோது, எதிரே திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த பிரபு (30) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஏழுமலை ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஏழுமலை, பிரபு உள்ளிட்ட 5 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஏழுமலையின் குழந்தை சர்வேஷ் பரிதாபமாக இறந்தான். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் விபத்து தொடர்பாக பிரபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்