< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி

தினத்தந்தி
|
25 Oct 2023 2:25 AM IST

ஆடுதுறை அருேக மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானாரகள்.

திருவிடைமருதூர்:

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மன்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ். இவரது மகன் டார்வின் (வயது 19). இவர் அம்மன்குடியில் இருந்து நந்திவனம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அதேபோல் திருநறையூர் செட்டித்தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் கமலக்கண்ணன்(30) என்பவர் ஆடுதுறை அருகே உள்ள அம்மன்குடியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அம்மன்குடி மெயின் ரோட்டில் சென்றபோது 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

2 வாலிபர்கள் பலி

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டார்வின், கமலக்கண்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருநீலக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்