< Back
மாநில செய்திகள்
பஸ்சில் தாளம் போட்டு, பாட்டு பாடி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள்
சென்னை
மாநில செய்திகள்

பஸ்சில் தாளம் போட்டு, பாட்டு பாடி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள்

தினத்தந்தி
|
12 Aug 2023 1:00 PM IST

கோயம்பேடு,

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கவியரசு கண்ணதாசன் நகர் நோக்கி மாநகர பஸ்(தடம் எண் 121 ஜி) புறப்பட்டது. பஸ்சில் ஏறிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ்சுக்குள் தாளம் போட்டும், பாட்டு பாடியும் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனை கண்டக்டர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், கண்டக்டருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோயம்பேடு நுழைவு வாயிலில் பஸ்சை நிறுத்திய கண்டக்டர், பஸ்சில் கல்லூரி மாணவர்கள் ரகளை செய்வதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் அங்கு வந்தனர். போலீசாரை கண்டதும் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள், பஸ்சில் இருந்து கீழே இறங்கி நாலாபுறமும் சிதறி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய கல்லூரி மாணவர்கள் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்