< Back
மாநில செய்திகள்
கவர்னரை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கவர்னரை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
10 Jan 2023 9:27 PM IST

திருவண்ணாமலையில் கவர்னரை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசின் 2023-ம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்ட உரையில் தமிழக அரசின் கொள்கைகளை படிக்க தவிர்த்து பேசிய கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருவண்ணாமலை அரசு கலைஞர் கலைக்கல்லூரி மாணவர் சங்கத்தினர் கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் கல்லூரி முன்பு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்