< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு நடந்த பயங்கரம் - சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்

24 March 2023 8:06 PM IST
கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டி செல்போன் பறித்து சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு, மறைமலை நகர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டி செல்போன் பறித்து சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம், வேடப்பர் தெருவரை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் கெளஷிக்.
இவர் சென்னையில் உள்ள பல்கலைகழகத்தில் படித்து வரும் நிலையில், கல்லூரி முடிந்து ரயிலில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, மறைமலை நகர் ரயில் நிலையத்தில் இறங்கிய கெளஷிக்கை பின் தொடர்ந்து வந்த இருவர், அவரை தாக்கி செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.