< Back
மாநில செய்திகள்
3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி
கரூர்
மாநில செய்திகள்

3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
16 Dec 2022 11:54 PM IST

கரூர் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை முயன்றார். இதையடுத்து அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவர் தற்ெகாலை முயற்சி

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள வில்லாபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் அரவிந்த் சபரி (வயது 18). இவர் அரவக்குறிச்சி அருகே உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று கல்லூரிக்கு செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வாங்குவதற்காக அரவிந்த் சபரி வந்துள்ளார். அப்போது கல்லூரி வளாகத்தில் வைத்து அரவிந்த் சபரி புகையிலை பொருட்கள் உபயோகித்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் அரவிந்த் சபரியிடம் பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரவேண்டும் என கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த அரவிந்த் சபரி கல்லூரியின் 3-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அரவிந்த் சபரி பலத்த காயம் அடைந்தார்.

தீவிர சிகிச்சை

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் படுகாயம் அடைந்த அரவிந்த் சபரியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்