< Back
மாநில செய்திகள்
ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
மாநில செய்திகள்

ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது

தினத்தந்தி
|
29 Jun 2024 8:41 AM IST

ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு வடமாநில வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சென்னை,

கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னையில் சட்டக்கல்லூரி படித்து வருகிறார். இவர், நேற்று அதிகாலை மங்களூரு மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை நோக்கி வந்தபோது, வாலிபர் ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த வாலிபர், பாலியல் தொல்லை கொடுத்து விட்டு அருகில் உள்ள பெட்டிக்கு ஓடமுயற்சித்தபோது, மாணவி அவரை சக பயணி ஒருவரின் உதவியுடன் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தார். ரெயில் பெட்டியில் இருந்த பெண் டிக்கெட் பரிசோதகர்களின் ஆலோசனையின்படி, அந்த நபரை சென்னை சென்டிரலுக்கு அழைத்து வந்தனர்.

வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் சஜன் (வயது 28) என்பதும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சட்டக்கல்லூரி மாணவி பயணித்த பெட்டிக்கு அருகில் உள்ள மற்றொரு பெட்டியில் பயணம் செய்ததும் தெரியவந்தது. பாலியல் தொல்லை தொடர்பாக சஜன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்