< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

தினத்தந்தி
|
13 Oct 2023 12:30 AM IST

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு செல்வதற்கு பழைய பஸ் நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ரோட்டோரத்தில் செல்போன் பேசிக் கொண்டிருந்த நபரின் அருகில் நடந்து சென்ற போது, அவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சத்தியராஜ் (26) என்பதும், கோபாலபுரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்