< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவி மாயம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்

தினத்தந்தி
|
1 Aug 2022 12:20 AM IST

உளுந்தூர்பேட்டையில் கல்லூரி மாணவி மாயமானார்.

உஉளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே வாணாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 46). இவரது மகள் சிவரஞ்சனி (வயது 20). இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெரியவடவாடி தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடினர். இருப்பினும் கிடைக்கவில்லை. இது குறித்து ராமமூர்த்தி திருநாவலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்