< Back
மாநில செய்திகள்
காட்டாங்கொளத்தூர் அருகே லாரி- கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

காட்டாங்கொளத்தூர் அருகே லாரி- கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி

தினத்தந்தி
|
24 March 2023 1:58 PM IST

காட்டாங்கொளத்தூர் அருகே லாரி- கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

லாரி- கார் மோதல்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 20). இவர் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் தாம்பரம் அருகே உள்ள வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 24). பீர்க்கன்கரணை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 21).

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ (வயது 22). இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவ-மாணவிகள். இவர்கள் வேறு கல்லூரி மாணவர் சந்தோஷ் என்பவரின் காரில் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சென்று விட்டு நேற்று அதிகாலை புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காட்டாங்கொளத்தூர் சிக்னல் அருகே வரும்போது முன்னால் சென்ற மினி லாரி மீது பின்னால் வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல நொறுங்கியது.

சாவு

இதில் காரில் இருந்த 2 மாணவிகள், 2 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். காரை ஓட்டி வந்த மாணவர் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய 2 மாணவிகள், 2 மாணவர்களை படுகாயத்துடன் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உயிரிழந்த சந்தோஷின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்