< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் ரெயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு
|31 Oct 2022 9:07 AM IST
வண்டலூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்ற கல்லூரி மாணவி மீது ரெயில் மோதி உயிரிழப்பு.
சென்னை,
சென்னை வண்டலூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மோதி கல்லூரி மாணவி சோனியா(வயது19) என்பவர் உயிரிழந்துள்ளார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நண்பர்களுடன் வந்து திரும்பும் போது பிறர் தண்டவாளத்தின் குறுக்கே கடந்த நடைமேடையில் ஏறிய நிலையில், உயரம் குறைவாக இருந்த சோனியா அப்படி ஏற முடியாததால் தண்டவாளத்தில் நடந்து நடைமேடைக்கு செல்லும் போது அவர் மீது ரெயில் மோதி உள்ளது.
இதில் பலத்தகாயம் அடைந்த மாணவி சோனியா பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது உயிரிழந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.