காஞ்சிபுரம்
மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவி பலி
|மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவி பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதியது
காஞ்சீபுரம் மாவட்டம் ஓரிக்கை பாக்கியலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகள் தாமரைசெல்வி (வயது 23), இவர் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி அருகே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை தாமரைசெல்வி கடக்க முயன்றார். அப்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக தாமரைசெல்வி மீது மோதியது.
பலி
இதில் தூக்கி வீசப்பட்ட தாமரைசெல்வி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அதேபோல மோட்டார் சைக்கிளில் வந்த எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர் நுபுர் ஷர்மா (19) பலத்த காயமடைந்தார்.
காயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாமரைசெல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.