< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி

தினத்தந்தி
|
28 Aug 2022 6:06 PM IST

ஆரணி அருகே வேகத்தடையில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் இறந்தார்.

ஆரணி

ஆரணியை அடுத்த அடையபுலம் ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் அழகேசன், சமையல் மாஸ்டர். இவரது மகன் ராகுல் (வயது 19). இவர் கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் ஆரணிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்றார்.

ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது, முன்னாள் சென்ற லாரி வேகத்தடை இருந்ததால் பிரேக் அடித்து நின்று சென்றது.

அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராகுல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் அழகேசன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்