< Back
மாநில செய்திகள்
தென்னை மரம் விழுந்து கல்லூரி மாணவி பலி
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

தென்னை மரம் விழுந்து கல்லூரி மாணவி பலி

தினத்தந்தி
|
2 Oct 2023 12:30 AM IST

தென்னை மரம் விழுந்து கல்லூரி மாணவி பாிதாபமாக இறந்தார்.


கோவை அருகே நரசீபுரம் - பூண்டி சாலையை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மகள் இளமதி (17). தொண்டாமுத்தூர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று சாமிநாதன் அவரது மனைவி மகள் இளமதி ஆகியோர் நரசீபுரத்தில் உள்ள பிரேம்குமார் தோட்டத்தில், வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மாட்டிற்கு தேவையான மாட்டு தீவனத்தை அறுத்து எடுத்துவர இளமதியிடம் கூறியுள்ளார். மாட்டுத் தீவனத்தை இரு சக்கர வாகனத்தில் வைத்து, இளமதி வந்து கொண்டிருந்தார். அப்போது, பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததது. இதில் அங்கிருந்த சுமார் 15 அடி உயரமுள்ள தென்னை மரம் சாய்ந்து இளமதி மீது விழுந்தது. இதில், தலை மற்றும் கழுத்து நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்