< Back
மாநில செய்திகள்
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
சென்னை
மாநில செய்திகள்

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

தினத்தந்தி
|
29 Jun 2022 8:37 AM IST

சென்னையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியானார்.

சென்னை ஏழுகிணறு ஐயப்பன் தெருவை சேர்ந்தவர் நரேஷ் (வயது 20). இவர் ஆவடி அடுத்த இந்துக்கல்லூரியில் பி.ஏ., தெலுங்கு முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு வந்த நரேஷ் மதியம் 1.45 மணிக்கு கல்லூரி முடிவடைந்த பின்னர் சக நண்பர்களுடன் இந்துக்கல்லூரி ரெயில் நிலையத்தில் இருந்து புறநகர் மின்சார ரெயிலில் ஏறி சென்னை நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ரெயில் படிக்கட்டில் தொங்கி கொண்டு சென்ற அவர், கூட்ட நெரிசலில் ஆவடிக்கும் அண்ணனூர் ரெயில் நிலையத்துக்கும் இடையே தவறி கீழே தண்டவாளத்தில் விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்