< Back
மாநில செய்திகள்
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி
நாமக்கல்
மாநில செய்திகள்

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி

தினத்தந்தி
|
3 July 2023 12:15 AM IST

திருச்செங்கோடு அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

திருச்செங்கோடு

கல்லூரி மாணவர்

மல்லசமுத்திரம் அடுத்த, வட்டூர் கிராமம், பெத்தாம்பட்டி வண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 55). இவரது மகன் கிஷோர் (19). கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கிஷோர் பக்ரீத் பண்டிகையையொட்டி விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கிஷோர் அவரது பாட்டியை வைகுந்தத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு மொபட்டில் பெத்தாம்பட்டி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். மோர்பாளையம் தனியார் வே-பிரிட்ஜ் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

பலி

இதில் கிஷோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கிஷோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்