< Back
மாநில செய்திகள்
லாரி மோதி கல்லூரி மாணவி பலி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

லாரி மோதி கல்லூரி மாணவி பலி

தினத்தந்தி
|
30 Sept 2022 3:36 AM IST

முக்கூடல் அருகே மொபட் மீது லாரி ேமாதிய விபத்தில் கல்லூரி மாணவி பலியானார். அவரது சகோதரி படுகாயம் அடைந்தார்

முக்கூடல்:

முக்கூடல் அருகே மொபட் மீது லாரி ேமாதிய விபத்தில் கல்லூரி மாணவி பலியானார். அவரது சகோதரி படுகாயம் அடைந்தார்.

சகோதரிகள்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த ராமர் மகள்கள் சங்கீதா (வயது 19), வைஷ்ணவி (18). இவர்கள் 2 பேரும் நெல்லை பழைய பேட்டையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்கள்.

இவர்கள் வழக்கம் போல் மொபட்டில் நேற்று கல்லூரிக்கு சென்றனர். மதியம் கல்லூரி முடிந்ததும் 2 பேரும் மொபட்டில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

மாணவி சாவு

முக்கூடல் அடுத்துள்ள இலந்தைகுளம் அருகே வரும்போது, அந்த வழியாக வந்த லாரியை டிரைவர் வலதுப்புறமாக திருப்பினார். அப்போது, எதிர்பாராதவிதமாக மொபட் மீது லாரியின் பின்பகுதி மோதியதாக கூறப்படுகிறது.

இதில் மொபட்டில் இருந்து 2 பேரும் கீேழ விழுந்தனர். அந்த சமயத்தில் லாரியின் பின்புற சக்கரம் சங்கீதா தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். வைஷ்ணவி படுகாயத்துடன் உயிர்தப்பினார்.

போலீசார் விரைந்தனர்

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக முக்கூடல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த வைஷ்ணவியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலியான சங்கீதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் நவநீதகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கூடல் அருகே லாரி மோதி கல்லூரி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்