< Back
மாநில செய்திகள்
பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவன்: ஒரு வாரத்திற்கு போக்குவரத்தை சரிசெய்ய கோர்ட்டு உத்தரவு..!
மாநில செய்திகள்

பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவன்: ஒரு வாரத்திற்கு போக்குவரத்தை சரிசெய்ய கோர்ட்டு உத்தரவு..!

தினத்தந்தி
|
20 Oct 2022 12:25 PM IST

காரைக்குடியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை, தினமும் இரண்டு மணி நேரம் போக்குவரத்தை சீர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காரைக்குடி,

காரைக்குடியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை, தினமும் இரண்டு மணி நேரம் போக்குவரத்தை சீர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், காரைக்குடி கல்லூரி சாலையில் மாணவிகள் முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் மகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதில் இருசக்கர வாகனம் ஓட்டிய நபரும், பின்னால் வீடியோ எடுத்து வந்த நபரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மாணவன் மகேஸ்வரனுக்கு ஒரு வாரத்திற்கு, தினமும் 2 மணி நேரம் போக்குவரத்தை சரி செய்யும் பணியினை வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்