< Back
மாநில செய்திகள்
கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து கல்லூரி மாணவர் காயம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து கல்லூரி மாணவர் காயம்

தினத்தந்தி
|
14 March 2023 9:21 PM IST

வந்தவாசி அருேக கரும்பு பாரம் ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து கல்லூரி மாணவர் காயம் அடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தக்கண்டராயபுரம் கிராமத்தை சேர்ந்த மாரி மகன் பெருமாள். இவர், டிராக்டர் டிப்பரில் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்றார்.

அப்போது டிராக்டரில் இவரது நண்பர்களான விசாமங்கலம் கிராமத்தை சேர்ந்த முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் லோகநாதன் மகன் குமார் (வயது 17) மற்றும் வினோத், வேல்முருகன் ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர்.

வந்தவாசியை அடுத்த எறும்பூர் கிராமம் அருகே செல்லும் போது டிராக்டர் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் குமார் மட்டும் கரும்பு குவியலுக்கு நடுவில் சிக்கிக் கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற வந்தவாசி தீயணைப்பு துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் கரும்புகளை அகற்றி குமாரை மீட்டனர். இதில் காயமடைந்த குமார் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்