< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
|21 July 2022 12:31 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது சோம்பட்டு கிராமம். இங்கு வசித்து வருபவர் நாகராஜ். எலக்ட்ரீசியன். இவரது மகள் ஹேமலதா (வயது 18). இவர் பொன்னேரி அரசு கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஹேமலதா நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த நிலையில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹேமலதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து கல்லூரி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.