< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி
திருச்சி
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி

தினத்தந்தி
|
31 May 2023 2:33 AM IST

கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

சோமரசம்பேட்டை:

சோமரசம்பேட்டையை அடுத்துள்ள போசம்பட்டி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருக்கு 2 மகள்களும், மகேஷ் (வயது 18) என்ற மகனும் உண்டு. மகேஷ் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மகேஷ் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு, அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். ஆழமான பகுதியில் குளித்தபோது, அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், கோவிந்தராஜ் பல இடங்களில் அவரை தேடினார். அப்போது கிணற்றில் மகேஷ் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்